Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தோரில் 87% முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்

சமூகப் பராமரிப்புத் துறையினரின் அயரா முயற்சியால், சிங்கப்பூரில் 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோரில் 87 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சமூகப் பராமரிப்புத் துறையினரின் அயரா முயற்சியால், சிங்கப்பூரில் 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோரில் 87 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும், சுகாதாரத்துக்கான இரண்டாம் அமைச்சருமான திரு. மசகோஸ் ஸுல்கிஃப்லி அதனைத் தெரிவித்தார்.

முதியோர் பராமரிப்பு நிலையங்களிலும், தாதிமை இல்லங்களிலும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன், 6 சமூகப் பராமரிப்புச் சேவை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களும், பொது மருத்துவர்களும் கொண்ட சுமார் 30 குழுவினர், வீடுகளுக்குச் சென்று மூத்தோருக்குத் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாண்டுக்கான சமூகப் பராமரிப்புத் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அமைச்சர் மசகோஸ் அது பற்றி தகவல் அளித்தார்.

இவ்வாண்டு கொண்டாட்டத்தில், பராமரிப்புத் துறையில் பங்காற்றும் 13 அமைப்புகளுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்