Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுத்த பொதுத் தேர்தலுக்கான விதிமுறைகளைத் தேர்தல் துறை முன்கூட்டியே அறிவிக்க இயலாது: அமைச்சர் சான்

தேர்தல் துறை, அடுத்த பொதுத் தேர்தலுக்கான விதிமுறைகளை முன்கூட்டியே அறிவிக்க இயலாது என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
அடுத்த பொதுத் தேர்தலுக்கான விதிமுறைகளைத் தேர்தல் துறை முன்கூட்டியே அறிவிக்க இயலாது: அமைச்சர் சான்

படம்: Xabryna Kek

தேர்தல் துறை, அடுத்த பொதுத் தேர்தலுக்கான விதிமுறைகளை முன்கூட்டியே அறிவிக்க இயலாது என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) தெரிவித்துள்ளார்.

COVID-19 கிருமிப்பரவலால் நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது; விதிமுறைகளை முன்கூட்டியே வெளியிட்டால், பின்னர் அவை சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாமல் போகலாம் என்றார் அவர்.

கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தலுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்பதால், தேர்தல் துறை எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக, விதிமுறைகளை வெளியிட விரும்புகிறது. அதேசமயம், தேர்தல் காலக்கட்டத்தின்போது ஏற்படக்கூடிய பல சூழ்நிலைகளை அது பரிசீலிக்கவேண்டிய நிலையில் உள்ளது.

என்றார் அமைச்சர் சான்.

தேர்தல் பிரசாரம் குறித்த விதிமுறைகளை அரசாங்கம் முன்கூட்டியே வெளியிடவேண்டும் என்று பாட்டாளிக் கட்சி நேற்று முன் தினம் கேட்டுக்கொண்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்