Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 3 மில்லியன் வாக்குச்சீட்டுகளும் இதர ஆவணங்களும் அழிக்கப்பட்டன

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட சுமார் 3 மில்லியன் வாக்குச் சீட்டுகளும் இதர ஆவணங்களும் இன்று அழிக்கப்பட்டன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட சுமார் 3 மில்லியன் வாக்குச் சீட்டுகளும் இதர ஆவணங்களும் இன்று அழிக்கப்பட்டன.

நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி, கடந்த 6 மாதங்களாக அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

வாக்குச் சீட்டுகள் அடங்கிய சுமார் 890 முத்திரையிடப்பட்ட பெட்டிகள், உச்ச நீதிமன்றப் பெட்டகத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டன.

துவாஸ் சௌத் (Tuas South) எரியாலைக்கு அவை எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு எரிக்கப்பட்டன.

தேர்தலில் போட்டியிட்ட சில வேட்பாளர்களும், தேர்தல் முகவர்களும் அந்தச் செயல்முறையைப் பார்வையிட்டனர்.

அனைத்து அரசியல் கட்சிகளும் அதனைக் காண அனுமதி உண்டு.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் உள்ளூரிலும் வெளிநாட்டிலும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் செலுத்தப்பட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்