Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல்2020 : வேட்புமனுத் தாக்கல் தினம் முதல்...வாக்களிப்பு தினம் வரை ...

சிங்கப்பூர், அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டது.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல்2020 : வேட்புமனுத் தாக்கல் தினம் முதல்...வாக்களிப்பு தினம் வரை ...

கோப்புப்படம்

சிங்கப்பூர், அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதோடு தேர்தல் ஆணை வெளியாகியிருக்கும் நிலையில், அடுத்த சில நாள்களில் என்னென்னவற்றை எதிர்பார்க்கலாம்?

வேட்புமனுத் தாக்கல் தினம்

விண்ணப்பதாரர்கள், வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள், தேவையான அனைத்து ஆவணங்களையும் நேரில் சென்று சமர்ப்பிக்கவேண்டும்.

தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிக்கான குறிப்பிட்ட வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வேட்புமனுத் தாக்கல் முடிந்தவுடன் வேட்பாளர்கள் பிரசாரத்தைத் தொடங்கலாம்.

பிரசாரம்

கொரோனா கிருமிப்பரவல் காரணமாக, நேரடிப் பிரசாரக்கூட்டங்கள் இந்த முறை இடம்பெறமாட்டா.

மாறாக, வேட்பாளர்கள் இணையம் வழியாகப் பிரசாரங்களை மேற்கொள்ளலாம்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தொகுதி அரசியல் ஒளிபரப்புகளில், ஒவ்வொரு வேட்பாளரும் 3 நிமிடம் வரை உரையாற்றலாம்.

தொகுதி அரசியல் ஒளிபரப்புகள், ஒளிவழி 5இல் இடம்பெறும்.

2015ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலைப்போல, கட்சி அரசியல் ஒளிபரப்புகள் இரண்டும் இடம்பெறும்.

19 வானொலி, தொலைக்காட்சி ஒளிவழிகளில் அவை ஒலி, ஒளிபரப்பாகும்.

பொதுத் தேர்தலில் கட்சிகள் களமிறக்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவற்றுக்கான ஒளிபரப்பு-நேரம் ஒதுக்கப்படும்.

பிரசார ஓய்வு நாள்

வாக்களிப்பு தினத்திற்கு முதல் நாள், பிரசார ஓய்வு நாள்.

அன்று, எந்தவிதமான பிரசாரத்தை மேற்கொள்வதற்கும் அனுமதியில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்