Images
  • Hcc
    ( படம்: AFP )

பிரபலமாகும் மாற்று மின்சாரச் சேவைகள்

சிங்கப்பூரில் SP குழுமம் அல்லாத வேறு மின்சாரச் சேவை நிறுவனத்தைத் தெரிவு செய்யும் முறை மக்களிடையே பிரபலமாக உள்ளது.

அதற்கான வழியமைத்துக் கொடுத்துள்ளது "திறந்து விடப்பட்ட மின்சாரச் சந்தை"

SP குழுமத்திற்குப் பதிலாக வேறொரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்போர் 30 விழுக்காடு வரை சேமிக்க வாய்ப்பு உண்டு.

திறந்துவிடப்பட்ட மின்சாரச் சந்தை சிங்கப்பூரில் 4 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்.

முன்னோடித் திட்டத்தின்கீழ், ஜூரோங்வாசிகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் மின்சாரச் சேவை வழங்கும் மற்றொரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

58, 78 ஆகிய அஞ்சல் எண்களைக் கொண்டிருப்போருக்குக் அந்தத் திட்டம் சென்ற நவம்பரில் விரிவுபடுத்தப்பட்டது.

இப்போது, ஹோகாங், பீஷான், அங் மோ கியோ ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் சுமார் 350ஆயிரம் பேர் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதத்திலிருந்து, தம்பனீஸ், பிடோக் போன்ற கிழக்குப் பகுதிகளில் வசிப்போருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கும்.

தெற்கிலும், மத்திய வர்த்தக வட்டாரத்திலும் உள்ள வாடிக்கையாளர்கள் மே மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

சுமார் 800ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும் வர்த்தகங்களும் மின்சார விநியோகச் சேவைக்காக மற்றொரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

கடந்த மாத இறுதியில் ஜூரோங் குடியிருப்பாளர்களில் சுமார் 40 விழுக்காட்டினர் வேறொரு நிறுவனத்திற்கு மாறினர்.

சென்ற செப்டம்பரில் அந்த விகிதம் 30 விழுக்காடாக இருந்தது.

யீஷூனிலும் சுவா சூ காங்கிலும் சுமார் 25 விழுக்காட்டினர் மாறியிருந்தனர்.

2ஆம் பகுதியில் வசிப்போரில் சுமார் 18 விழுக்காட்டினர் மற்றொரு நிறுவனத்திற்கு மாறியுள்ளனர் 

Top