Images
  • electricity
    (கோப்புப் படம்: Xabryna Kek)

மின்சாரச் சேவைகளை நிறுத்தவுள்ள iSwitch

சிங்கப்பூரில் திறந்த மின்சாரச் சந்தைத் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவந்த iSwitch அதன் மின்சாரச் சேவைகளை நிறுத்தவுள்ளதாகக் கூறியுள்ளது.

தற்போதைய மின்சாரச் சந்தை நிலவரத்தைக் கருத்தில்கொண்டு அந்த முடிவை எடுத்ததாக iSwitch சொன்னது.

அதன் மின்சாரச் சேவைகள் அடுத்த மாதம் 11-ஆம் தேதியன்று முடிவடையும்.

இருப்பினும், வாடிக்கையாளர்களின் மின்சார விநியோகத்தில் தடை ஏதும் ஏற்படாது என்றும் வாடிக்கையாளர்களின் கணக்குகள் அனைத்தும் SP குழுமத்துக்கு மாற்றப்படும் என்றும் கூறப்பட்டது.

வாடிக்கையாளர்களின் கணக்குகளைச் சுமுகமாக மாற்றுவது குறித்து SP குழுமம், எரிசக்திச் சந்தை ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவதாக iSwitch கூறியது.

வாடிக்கையாளர்கள், விருப்பப்பட்டால், திறந்த மின்சாரச் சந்தைத் திட்டத்தின்கீழ் செயல்படும் மற்றொரு நிறுவனத்திற்கு எப்போது வேண்டுமானாலும் மாறிக்கொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்தது.

- CNA/ad(ac)

Top