Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எரிசக்திச் சந்தை ஆணையமும் Shell நிறுவனமும் 4 மில்லியன் வெள்ளி பங்காளித்துவ உடன்பாட்டில் கையெழுத்து

எரிசக்திச் சந்தை ஆணையமும், Shell நிறுவனமும் 4 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பங்காளித்துவ உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

எரிசக்திச் சந்தை ஆணையமும், Shell நிறுவனமும் 4 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பங்காளித்துவ உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.

உள்ளுர் எரிசக்தி நிறுவனங்களைத் தொடங்குவதற்கு, அந்தப் பங்காளித்துவம் கைகொடுக்கும்.

திட்டத்திற்கு Enterprise Singapore அமைப்பு ஆதரவளித்துள்ளது.

2030 சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம், சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை மேம்பாடு ஆகியவற்றுக்கு
ஆதரவளிக்கும் வகையில், எரிசக்திச் சந்தை ஆணையமும், Shell நிறுவனமும் அவற்றின் ஒத்துழைப்பை மறுஉறுதிப்படுத்தியுள்ளன.

இதற்கு முன்னதாகச் செய்துகொண்ட 4 மில்லியன் வெள்ளி ஒப்பந்தம் உட்பட, அவற்றின் கடப்பாடு மொத்தம் 8 மில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது.

Shell StartUp Engine திட்டத்தின் மூலம், புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தி, எரிசக்திச் செயல்திறன், குறைந்த கரியமிலவாயுத் தீர்வுகள் ஆகிய அம்சங்களில் மேலும் பல புதிய நிறுவனங்கள் தங்கள் நிபுணத்துவத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

2019இல் தொடங்கிய பங்காளித்துவத்தின் மூலம் இதுவரை
12 நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்