Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பசுமை எரிசக்திப் பயன்பாட்டைத் துரிதப்படுத்த $10 மில்லியன் மதிப்பிலான உடன்படிக்கைகள்

எரிசக்திச் சந்தை ஆணையம், சிங்கப்பூரில் பசுமை எரிசக்திப் பயன்பாட்டைத் துரிதப்படுத்த 10 மில்லியன் வெள்ளி மதிப்பிலான இரண்டு புதிய பங்காளித்துவ உடன்படிக்கைகளைச் செய்துகொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பசுமை எரிசக்திப் பயன்பாட்டைத் துரிதப்படுத்த $10 மில்லியன் மதிப்பிலான உடன்படிக்கைகள்

(படம்: JTC)

எரிசக்திச் சந்தை ஆணையம், சிங்கப்பூரில் பசுமை எரிசக்திப் பயன்பாட்டைத் துரிதப்படுத்த 10 மில்லியன் வெள்ளி மதிப்பிலான இரண்டு புதிய பங்காளித்துவ உடன்படிக்கைகளைச் செய்துகொண்டுள்ளது.

உள்ளூர் அளவில் அந்தத் துறையில் திறன்களை மேம்படுத்தவும் அந்தப் பங்காளித்துவம் கைகொடுக்கும்.

JTC நிறுவனத்துடன் இணைந்து, ஜூரோங் தீவில், பசுமை எரிசக்தி சார்ந்த புத்தாக்கத் தீர்வுகளுக்கு 6 மில்லியன் வெள்ளி வழங்க ஆணையம் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது.

சிறிய, நடுத்தர நிறுவனங்களும், ஆய்வுத் துறையினரும் பரிந்துரைகளைச் சமர்ப்பித்து நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

இந்நிலையில், எரிசக்திச் சந்தை ஆணையம், Envision Digital International நிறுவனத்துடனும் பங்காளித்துவ ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு முறைக்கான சேவைகளை வழங்கும் அந்நிறுவனம், அந்த உடன்பாட்டின்மூலம் உள்ளூர் எரிசக்தி நிறுவனங்களின் திறன்களை மேம்படுத்த உதவும்.

இரண்டு பங்காளித்துவ ஒப்பந்தங்களுக்கும் Enterprise Singapore அமைப்பு ஆதரவு வழங்குகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்