Images
  • gavel
    ( படம்: AFP )

வயதுகுறைந்த பணிப்பெண்களைக் கொண்டு வந்த வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளருக்கு 8,500 வெள்ளி அபராதம்

வயதுகுறைந்த பணிப்பெண்களைக் கொண்டு வந்த வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளருக்கு 8,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்த பதின்ம வயதினர் இருவர் சிங்கப்பூரில் பணிப்பெண்களாக வேலை செய்ய இங்கு வரவழைக்கப்பட்டனர்.

சம்பவம் நிகழ்ந்தபோது, அவர்களின் வயது 15, 18 ஆக இருந்தது.

AG Employment Agency நிறுவனத்தின் உரிமையாளரான ஷெர்லின் டே லீ,
வேலை உரிம விதிமுறைகளை மீறிய இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

சட்டப்படி, வெளிநாட்டுப் பணிப்பெண்கள் குறைந்தது 23 வயது நிரம்பியவர்களாக இருக்கவேண்டும்.

மியன்மாரில் உள்ள முகவர் மூலம் அந்த இருவர் சிங்கப்பூரில் பணி புரிவதற்கான வாய்ப்பை நாடியதாக விசாரணையில் தெரிய வந்தது.  

Top