Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக வேலை வாய்ப்பு குறித்த புகார்களைப் பெற்ற நடுவர் மன்றம்

நடுவர் மன்றம், சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை, 1,100க்கும் அதிகமான புகார்களைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக வேலை வாய்ப்பு குறித்த புகார்களைப் பெற்ற நடுவர் மன்றம்

(படம்: AFP/Simin Wang)

சிங்கப்பூரின் வேலை வாய்ப்பு குறித்த புகார்களுக்கான நடுவர் மன்றம், சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை, 1,100க்கும் அதிகமான புகார்களைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 80 விழுக்காட்டுப் புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டது. அதன் தொடர்பில் 700க்கும் அதிகமான காசோலைகள் வழங்கப்பட்டன.

அரசு நீதிமன்றங்கள் வெளியிட்ட புள்ளி விவரங்கள் அதனைத் தெரிவித்தன.

நடுவர் மன்றத்திடம் புகார் அளித்தோரில் கால்வாசிப் பேர், நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர்.

சம்பளம் தொடர்பான புகார்களும் அவற்றில் அடங்கும்.

சம்பளம் தரப்படவில்லை, ஆட்குறைப்பு அனுகூலங்கள் வழங்கப்படவில்லை போன்றவை அவற்றில் சில.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்