Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் அரிய வகை குரங்குகளைப் பாதுகாக்க முயற்சி

சிங்கப்பூருக்கே உரிய அரிய வகை ராஃபிள்ஸ் பென்டட் லங்கூர் (Raffles Banded Langur) குரங்குகளைப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் அரிய வகை குரங்குகளைப் பாதுகாக்க முயற்சி

படம்: CNA

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூருக்கே உரிய அரிய வகை ராஃபிள்ஸ் பென்டட் லங்கூர் (Raffles Banded Langur) குரங்குகளைப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

அந்தக் குரங்கினத்தின் கடைசி வாழ்விடம் தாம்சன் இயற்கைப் பூங்காவாக உருமாற்றப்பட்டுள்ளது.

ராஃபிள்ஸ் பென்டட் லங்கூர் வகைக் குரங்குகள் அபாய நிலையில் உள்ளன.

 உலக அளவில் அந்த இனத்தைச் சேர்ந்த 300 குரங்குகளே உள்ளன.

புதிய தாம்சன் இயற்கைப் பூங்கா அந்த குரங்கினத்துக்கு பாதுகாப்பான வசிப்பிடமாகத் திகழும்.

குரங்குகள் சுதந்திரமாச் சுற்றித் திரிய, வனப்பகுதியை இணைக்கும் வகையில் அங்கு மரங்கள் நடப்பட்டுள்ளன.

அரிய வகைக் குரங்குகள் விரும்பி உண்ணும் பழங்கள், இலைகள் கொண்ட 300க்கும் மேற்பட்ட செடிகளும் நடப்பட்டுள்ளன.

தாம்சன் இயற்கைப் பூங்காவுக்கு அருகிலுள்ள, மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைப் பாதுகாப்பு வட்டாரத்தில் சுமார் 60 குரங்குகள் சுற்றித் திரிகின்றன.

அவற்றைப் பாதுகாக்கும் திட்டம் மூவாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.

அந்தக் குரங்கினம் குறித்த தகவலைச் சேகரித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டப்படுகிறது.

பிரிந்து கிடக்கும் வனப்பகுதிகளை ஒருங்கிணைத்து வசிப்பிடத்தை விரிவுப்படுத்தி அரிய வகைக் குரங்குகளைப் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்