Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பசுமை எரிசக்திப் பயன்பாடு... நீடித்த நிலைத்தன்மை மிக்க எதிர்காலத்தை நோக்கிப் பயணம்

சிங்கப்பூரில் பசுமைமிக்க எரிசக்தியைப் பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் பசுமைமிக்க எரிசக்தியைப் பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

நீடித்த நிலைத்தன்மை மிக்க வருங்காலத்தை நோக்கி உலக நாடுகள் பல முயற்சிகளில் இறங்கியுள்ளன. சிங்கப்பூரும் அவ்வாறு செய்கிறது.

அதன் தொடர்பில், குறைவான வெப்பவாயு வெளியேற்றத்திற்கான நீண்டகால மேம்பாட்டு உத்தி (Long-Term Low-Emissions Development Strategy - LEDS) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன் கீழ், 2050ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தைப் பாதியாக்க சிங்கப்பூர் முயல்கிறது.

இந்நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் அகற்றுவது நோக்கம்.

சிங்கப்பூரின் மொத்தக் கரியமில வாயு வெளியேற்றத்தில் 40 விழுக்காடு, எரிசக்தித் துறையிலிருந்து வருகிறது. அதனைக் குறைக்க 4 வளங்களை சிங்கப்பூர் அடையாளம் கண்டுள்ளது.

  • இயற்கை எரிவாயு (Natural Gas)

பசுமையான எரிசக்தி வளங்களைப் பயன்படுத்தத் தொடங்கும் சிங்கப்பூரில், தொடர்ச்சியான, தடங்கலற்ற, நம்பகத்தன்மை மிக்க எரிசக்தி வளமும் தேவை. ஆதலால் இயற்கை எரிவாயு தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

  • சூரியசக்தி

சிங்கப்பூரில் ஆக அதிகம் பயன்படுத்தக்கூடிய மறுபயனீட்டு எரிசக்தியாகச் சூரியசக்தி திகழ்கிறது. இன்று சுமார் 500 மெகாவாட் அளவு சூரியசக்திப் பலகைகள் சிங்கப்பூரில் பொருத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 2 கிகாவாட் அளவு சூரிய சக்திக் பலகைகளைப் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அதன் மூலம் நாட்டின் மின்சாரத் தேவையில் 3 விழுக்காட்டை மட்டுமே பூர்த்தி செய்யமுடியும்.

  • வட்டார எரிசக்தி எல்லை

நிலப் பற்றாக்குறையை எதிர்கொள்ள, சிங்கப்பூர் அதன் எல்லைகளைத் தாண்டிப் பிறநாடுகளிடமிருந்து பசுமையான எரிசக்தி வளங்களைப் பயன்படுத்துகிறது.

2035 ஆண்டுக்குள், பிற நாடுகளிலிருந்து கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கக்கூடிய மின்சார வளங்களை சிங்கப்பூர் இறக்குமதி செய்ய முனைகிறது

அதன் மூலம் அந்த ஆண்டின் மின்சாரத் தேவையில் 30 விழுக்காட்டைப் பூர்த்தி செய்யலாம்.

  • புதிதாய் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள்

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்களுக்கான ஆய்வு, வளர்ச்சிப் பணிகளில் எரிசக்திச் சந்தை ஆணையம் ஈடுபடுகிறது.

அதற்கான நிதியும் வழங்கப்பட்டுள்ள வேளையில், ஆணையம் தொடர்ந்து பல்வேறு வழிகளில் பசுமை எரிசக்தி சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் கையாள முயல்கிறது.

புதிய புவிவெப்பத் தொழில்நுட்பம் (geothermal energy), எரிசக்திக்கான மாற்று வளமாக விளங்கலாம். அது குறித்து ஆணையம் பல தரப்பினருடன் இணைந்து ஆராய்ந்து வருகிறது.

எனவே, சிங்கப்பூர் வாசிகள் தொடர்ந்து சிக்கனமான வழிகளில் எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் நீடித்த நிலைத்தன்மை மிக்க எதிர்காலத்தை உருவாக்கலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்