Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொறியியல் துறையை மேம்படுத்த முயற்சிகள்

பொறியியல் துறையில் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை வலுப்படுத்தவும், உள்ளூர்த் திறனாளர்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

வாசிப்புநேரம் -

பொறியியல் துறையில் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை வலுப்படுத்தவும், உள்ளூர்த் திறனாளர்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அது தொடர்பான 3 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாயின.

போக்குவரத்து போன்ற துறைகளுக்கான தீர்வுகளை ஆராயும் பணியில் AI சிங்கப்பூர் அமைப்பு, தனியார் துறையுடன் இணைந்து செயல்படும்.

அதோடு பொறியாளர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளக் கற்றல் திட்டங்கள் கொண்டுவரப்படும்.

தேசியப் பொறியாளர்கள் தினக் கொண்டாட்டத்தின் போது நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ அது குறித்துப் பேசினார்.

COVID-19 கிருமித்தொற்று, பொறியியல் புத்தாக்கத்துக்கான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியிருப்பதாக அவர் சொன்னார்.

செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உடல் வெப்பச் சோதனைகள், கிருமிநாசினி தெளிக்கச் செயல்படும் இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்பங்களை அவர் உதாரணமாகச் சுட்டினார்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களில் இளைய தலைமுறையினர் பெறும் அடிப்படைக் கல்வி, அவர்கள் பொறியியல் துறையில் வேலை வாய்ப்புகளைத் தேட ஊக்குவிக்கும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்