Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நிறுவனங்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற வர்த்தகத் திட்டம் ஒன்றே போதும்:வர்த்தக, தொழில் அமைச்சர்

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற வர்த்தகத் திட்டம் ஒன்றைக் கொண்டிருந்தாலே போதும் என வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
நிறுவனங்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற வர்த்தகத் திட்டம் ஒன்றே போதும்:வர்த்தக, தொழில் அமைச்சர்

கோப்புப்படம்: Gaya Chandramohan

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற வர்த்தகத் திட்டம் ஒன்றைக் கொண்டிருந்தாலே போதும் என வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

அந்த வர்த்தகத் திட்டத்தைப் பொறுத்து Enterprise Singapore போன்ற பொருளியல் அமைப்புகள் தேவையான உதவித் திட்டங்களை வழங்க ஏற்பாடு செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான மாநாடு ஒன்றில் திரு. சான் அதனை அறிவித்தார்.

பொருளியல் சூழல் நிலையற்று இருப்பதால் வர்த்தகம் செய்வதில் பலரிடையே நம்பிக்கை குறைந்துள்ளது.

தங்களின் வருமானம் மேலும் குறையலாம் எனப் பல நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

அதனைத் தொடர்ந்து வர்த்தகத்திற்குக் கூடுதல் அரசாங்க ஆதரவு வழங்கப்படவுள்ளது.

ஆயிரம் நிறுவனங்களைக் கொண்டு கருத்தாய்வு ஒன்று நடத்தப்பட்டது.

அவற்றில் சுமார் 40 விழுக்காட்டு நிறுவனங்கள் தாங்கள் ஈட்டும் வருமானம் குறையலாம் என்று எணணுவது தெரியவந்தது.

அந்த விகிதம் சென்ற ஆண்டுக் கருத்தாய்வில் பதிவானதைக் காட்டிலும் 12 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகம்.

இவ்வேளையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பூசல் குறுகியகாலப் பிரச்சினையாக இருப்பதுபோல் தோன்றவில்லை என்றும் அமைச்சர் சான் எச்சரித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்