Images
  • cbd
    (கோப்புப் படம்: Reuters/Edgar Su)

'சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சியடைய எல்லா வகையிலும் ஆதரவு வழங்கப்படும்' - அமைச்சர் சான் சுன் சிங்

வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சியடைய எல்லா வகையிலும் ஆதரவு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

நிதி ஆதரவுத் திட்டங்கள், மானியங்கள் மட்டுமல்லாமல், அத்தகைய நிறுவனங்கள் அவற்றின் தொழிலில் வளர்ச்சி காண்பதற்குக் கூடுதல் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய சேவைகளை அறிமுகம் செய்யும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கைகொடுக்க Enterprise Singapore அமைப்பு உருவாக்கியுள்ள திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியில் திரு.சான் பேசினார்.

'Enterprise Leadership for Transformation Programme' என்பது திட்டத்தின் பெயர்.

அந்த ஓராண்டுத் திட்டத்தில் 38 சிறிய, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்த 60 பேர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

திட்டத்தின் மூலம் தொழில்துறை சார்ந்த நிபுணர்களுடன் பங்கேற்பாளர்கள் தொடர்புகொள்ளலாம்; அவர்களிடம் ஆலோசனைகளையும் பெறலாம்.

அடுத்த மூவாண்டில், திட்டத்தின்கீழ் 900 வர்த்தகத் தலைவர்களைப் பயிற்றுவிக்க அரசாங்கம் இலக்கை வகுத்துள்ளது.

Top