Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சொத்து மேம்பாட்டாளர்கள் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொள்ளவேண்டும்

சிங்கப்பூரின் சொத்து மேம்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் அதற்காகத் தண்டிக்கப்படுவதில்லை.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் சொத்து மேம்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் அதற்காகத் தண்டிக்கப்படுவதில்லை.

இருப்பினும், இயற்கை வளப் பகுதிகளுக்கும், வனப் பகுதிகளுக்கும் அருகில் கட்டுமானங்களை நிறுவும்போது, பொருத்தமான நடவடிக்கைகளுக்கு அவை பரிந்துரைக்கவேண்டும்.

தேசிய வளர்ச்சிக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங் (Sun Xueling), நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.

சென்ற மாதம், மண்டாய் வட்டாரச் சாலைகளில் வாகனங்கள் மோதியதால்,கர்ப்பமுற்றிருந்த காட்டுப்பன்றியும், அரிய வகை  சம்பார் மானும் மாண்டன.

மண்டாய் பூங்கா மேம்பாட்டு நிறுவனம், அந்த வட்டாரச் சாலைகளில், விலங்குகள் வாகனங்களால் மோதப்பட்டு கொல்லப்படுவதைத் தவிர்க்கப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகத் திருவாட்டி சுன்  கூறினார்.

மண்டாய் லேக் ரோட்டில்  அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்பட்டது அவற்றில் அடங்கும்.

சொத்து மேம்பாட்டு நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள், இயற்கை ஆர்வலர் குழுக்கள் ஆகியவை இணைந்து, கூடுதல் அறிவிப்புப் பலகைகளை நிறுவுவது குறித்தும், அவை எங்கெங்கு நிறுவப்படவேண்டும் என்பது பற்றியும் ஆலோசித்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்