Images
  • people stock

வெளிநாட்டு ஊழியரை வேலையில் அமர்த்தப் பொய்யான தகவலைக் கொடுத்ததாக நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு

மனிதவள அமைச்சுக்குப் பொய்யான தகவலைக் கொடுத்ததாக Ti2 Logistics நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அத்தகைய குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் முதல் நிறுவனம் Ti2 Logistics.

கப்பல்துறையிலுள்ள அந்த நிறுவனம் வெளிநாட்டு ஊழியரின் வேலை அனுமதிச் சீட்டு விண்ணப்பத்துக்காக மனித வள அமைச்சிடம் பொய்த் தகவல் அளித்ததாய் நம்பப்படுகிறது.

வெளிநாட்டுக்காரரை வேலைக்கு அமர்த்தும் முன் உள்ளூர் திறனாளர்கள் இருவரின் விண்ணபங்களைப் பரிசீலித்ததாக Ti2 Logistics குறிப்பிட்டிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்நிறுவனத்திற்கு 20,000 வெள்ளிவரை அபராதம் விதிக்கப்படலாம்.  

Top