Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மத்திய விரைவுச்சாலையில் உள்ள சில நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டணம் ( ERP) விதிக்கப்படமாட்டாது... சில நேரங்களில்

மத்திய விரைவுச்சாலையில் உள்ள சில நுழைவாயில்களில் டிசம்பர் மாதப் பள்ளி விடுமுறையின்போது குறிப்பிட்ட சில நேரங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் ( ERP) விதிக்கப்படமாட்டாது.

வாசிப்புநேரம் -
மத்திய விரைவுச்சாலையில் உள்ள சில நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டணம் ( ERP) விதிக்கப்படமாட்டாது... சில நேரங்களில்

(கோப்புப்படம்: CNA)

மத்திய விரைவுச்சாலையில் உள்ள சில நுழைவாயில்களில் டிசம்பர் மாதப் பள்ளி விடுமுறையின்போது குறிப்பிட்ட சில நேரங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் ( ERP) விதிக்கப்படமாட்டாது.

அது, வரும் திங்கட்கிழமை முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ஆம் தேதிவரை நீடிக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

மின்னியல் சாலைக் கட்டணம் ( ERP) விதிக்கப்படாத நுழைவாயில்களின் விவரங்கள்:

தெற்கு நோக்கிய CTE, பிராடல் ரோட்டுக்கு (Braddell Road) முன்னால் உள்ள நுழைவாயில். காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை.

பிராடல் ரோட்டுக்கு பிறகு உள்ள தெற்கு நோக்கிய CTE,
PIE-ஐ விட்டுத் தெற்கு நோக்கிச் செல்லும் CTE-ஐ நுழையும் சாலை ஆகியவற்றில் அமைந்துள்ள 4 நுழைவாயில்கள் - காலை 9 மணி முதல் 9.30 மணி வரை

மற்ற நேரங்களில் விதிக்கப்படும் கட்டணங்களில் மாற்றமில்லை.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்