Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தாறுமாறாகச் செல்லும் தனிநபர் நடமாட்டச் சாதனமா...புகார் செய்யப் புதிய வசதி

தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பயணத்தைச் சுலபமாக்கினாலும் அவை பாதசாரிகளுக்கு இடையூறாக இருக்கலாம்.

வாசிப்புநேரம் -
தாறுமாறாகச் செல்லும் தனிநபர் நடமாட்டச் சாதனமா...புகார் செய்யப் புதிய வசதி

(படம்: Today)

தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பயணத்தைச் சுலபமாக்கினாலும் அவை பாதசாரிகளுக்கு இடையூறாக இருக்கலாம்.

சமூக ஊடகங்களில் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் சாலை விதிமுறைகளை மீறும் காணொளிகளைப் பார்த்திருப்பீர்கள். இம்மாதம் 31ஆம் தேதியிலிருந்து MyTransport.sg செயலி வழியாகச் சாலை விதிமுறைகளை மீறும் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பற்றிப் புகார் செய்யலாம்.

"Report PMD/PAB Incident" எனும் அம்சம் வழியாகக் காணொளி அல்லது படம் எடுத்துப் புகார் செய்யலாம்.

விதிமீறல் அல்லது விபத்து எங்கு, எப்போது நடந்தது என்று குறிப்பிட வேண்டும். புகார் அளிப்பவரின் தனிநபர் தகவல்களையும் அனுப்ப வேண்டும்

விதிகளுக்குப் புறம்பாகத் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை ஓட்டிச் செல்வோரை அடையாளங்காண CCTV எனப்படும் உள்கட்டமைப்புக் கண்காணிப்புக் கேமராக்கள் பயன்படுத்தப்படும் முயற்சியுடன் ஒன்றாக அறிமுகம் காண்கிறது செயலியின் அம்சம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்