Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

துண்டுப் பிரசுரங்களின் தமிழ் மொழிபெயர்ப்பில் பிழை – மன்னிப்புக் கோரினார் மக்கள் செயல் கட்சி காக்கி புக்கிட் கிளைப் பிரதிநிதி

காக்கி புக்கிட் வட்டாரக் குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பில் காணப்பட்ட பிழைகளுக்காக அந்தப் பகுதிக்கான மக்கள் செயல் கட்சிக் கிளைப் பிரதிநிதி திரு. ஷம்சுல் கமார் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

காக்கி புக்கிட் வட்டாரக் குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பில் காணப்பட்ட பிழைகளுக்காக அந்தப் பகுதிக்கான மக்கள் செயல் கட்சிக் கிளைப் பிரதிநிதி திரு. ஷம்சுல் கமார் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அது குறித்த நிழற்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, திரு. கமார் தமது Facebook பதிவில் அது பற்றி விளக்கம் அளித்தார். காக்கி புக்கிட் வட்டாரம், அல்ஜுனிட் குழுத்தொகுதியின் கீழ் வருகிறது.

சம்பந்தப்பட்ட துண்டுப்பிரசுரங்களைப் பெற்ற தமிழ்க் குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடத்திற்கும் திரு. கமார் வருத்தம் தெரிவித்தார். தாமும் தமது குழுவினரும் அதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றார் அவர்.

துண்டுப் பிரசுரத்தில் உள்ள பிழைகள் உடனடியாகத் திருத்தப்படும் என்று திரு. கமார் உறுதியளித்தார். அதே நேரத்தில், பிழையுள்ள துண்டுப் பிரசுரங்களின் விநியோகம் உடனடியாக நிறுத்தப்படும் என்று அவர் சொன்னார். மீண்டும், அதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு கமார் கூறினார்.

மொழிபெயர்ப்புத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அரசாங்கம் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவை 2014ஆம் ஆண்டு உருவாக்கியது. மொழிபெயர்ப்பு சார்ந்த விவகாரங்களை ஆராய அரசாங்கம், தனியார் துறை, பொதுமக்கள் முத்தரப்பினரும் இணைந்து கூட்டாகப் பணியாற்ற அது முயற்சிகளை எடுத்து வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்