Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட தினமும் ஒரு மின்படிக்கட்டு விபத்து

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட அன்றாடம் மின்படிக்கட்டு தொடர்பான ஒரு விபத்தாவது இடம்பெறுவதாகத் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட தினமும் ஒரு மின்படிக்கட்டு விபத்து

(படம்: Pixabay)

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட அன்றாடம் மின்படிக்கட்டு தொடர்பான ஒரு விபத்தாவது இடம்பெறுவதாகத் தெரியவந்துள்ளது.

பயனீட்டாளர் நடத்தை காரணமாகப் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுவதாக Talking Point கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு நடந்த விபத்துகளில் 60 விழுக்காட்டினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மின்படிக்கட்டில் குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகளைப் பயன்படுத்துவது, கைப்பிடிகளைப் பயன்படுத்தாதது போன்ற நடத்தைகள் காரணமாகவும் விபத்துகள் ஏற்படுகின்றன.

சிங்கப்பூரில் சுமார் ஏழாயிரம் மின்படிக்கட்டுகள் இருக்கின்றன.

கைக்குழந்தைகள் உட்பட பலருக்கு மின்படிக்கட்டு விபத்தால் தலையிலும் முதுகுத்தண்டிலும் காயம் ஏற்படுவதாக KK மகளிர், சிறார் மருத்துவமனையின் அவசரகாலப் பிரிவு மருத்துவர் கூறினார்.

தள்ளுவண்டிகளில் பிள்ளைகளை அமரவைத்து அவர்களை மின்படிக்கட்டில் தள்ளிச்செல்வது, முறையான இருக்கை வாரைக் குழந்தைக்கு அணிவிக்காதது போன்றவற்றால் பெரும்பாலான சம்பவங்கள் ஏற்படுவதாக டாக்டர் ஷேரன் கோ கூறினார்.

2012ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட மின்படிக்கட்டு விபத்துகளின் எண்ணிக்கை ஒரு மடங்குக்குமேல் அதிகரித்திருந்ததாகக் கூறப்பட்டது.

பெரும்பாலான விபத்துகள் கடைத் தொகுதிகளில் ஏற்பட்டவை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்