Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எஸ்பிளனேட் நீர்முகப்பு அரங்கின் மேம்பாட்டுக்காக $10 மில்லியன் வழங்கும் சிங்டெல்

சிங்கப்பூரின் எஸ்பிளனேட்டில் வரவிருக்கும் நீர்முகப்பு அரங்கின் (Waterfront Theatre) மேம்பாட்டுப் பணிகளுக்கு 10 மில்லியன் வெள்ளி வழங்கவிருப்பதாக சிங்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
எஸ்பிளனேட் நீர்முகப்பு அரங்கின் மேம்பாட்டுக்காக $10 மில்லியன் வழங்கும் சிங்டெல்

(படம்: The Esplanade)

சிங்கப்பூரின் எஸ்பிளனேட்டில் வரவிருக்கும் நீர்முகப்பு அரங்கின் (Waterfront Theatre) மேம்பாட்டுப் பணிகளுக்கு 10 மில்லியன் வெள்ளி நிதி உதவி வழங்கவிருப்பதாக சிங்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

அது 2021ஆம் ஆண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

550 இருக்கைகள் கொண்ட அந்த அரங்கைக் கட்டுவதற்கு 30 மில்லியன் வெள்ளி செலவாகும். மக்கான்சூத்தரா கிளட்டன்ஸ் பே (Makansutra Gluttons Bay) உணவு நிலையத்துக்கு அருகே அரங்கம் அமையவுள்ளது.

அதன் கட்டுமானப் பணிகளுக்கு மேலும் 10 மில்லியன் வெள்ளியை அரசாங்கம் வழங்கவுள்ளது.

மேலும் தேவைப்படும் தொகையை எஸ்பிளனேட் அதன் ஆதரவாளர்களின்மூலமும் பொது நிதித் திரட்டு நிகழ்ச்சிகளின்வழியும் திரட்டும் எனத் தெரிவித்தது.

இன்று எஸ்பிளனேட்டில் நடந்த நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதியும் புதிய அரங்கின் கட்டுமானத்துக்காகப் பயன்படுத்தப்படும்.

எஸ்பிளனேட்டின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் பெருமை என்றார் சிங்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுவா சொக் கூன். 

சிங்கப்பூர்க் கலைஞர்களும் நிறுவனங்களும் மேலும் அதிகமானோரைச் சென்றடைய தங்களின் பங்களிப்பு உதவும் என்று நம்புவதாகச் சொன்னார் அவர்.

அடுத்த ஆண்டு முதல் பகுதியில் அரங்கின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்