Images
  • EU-Singapore free trade deal (1)

சிங்கப்பூர், ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்படிக்கை முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

சிங்கப்பூருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கு ஒப்புதல்பெறும் முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஒப்பந்தத்தால் விளையக்கூடிய உத்திபூர்வ, பொருளியல் நன்மைகளை ஒன்றியத்தின் அதிகாரிகளிடம் எடுத்துரைத்து திருப்திப்படுத்தும் முக்கியமான கட்டம் அது என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் வருணித்தார்.

ஒன்றியத்தின் முக்கிய அதிகாரிகளையும், பிரதிநிதிகளையும் அவர் சந்தித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர், ஆஸ்ட்டிரியாவின் மின்னிலக்க, பொருளியல் துறைகளுக்கான அமைச்சர் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.

சந்திப்புகளில், உடன்படிக்கைக்கான ஒப்புதலைப் பெறுவதை விரைவுபடுத்தும் முயற்சிகளைத் திரு. சான் மேற்கொண்டார்.

அடுத்த ஆண்டு அது நடைமுறைக்கு வரவேண்டும் என்பது இலக்கு. பிரிட்டன் உள்ளிட்ட ஒன்றியத்தின் 28 உறுப்பு நாடுகளின் ஒப்புதல் அதற்குத் தேவை.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றம் சிங்கப்பூரின் பொருளியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கவலை நிலவுகிறது.

தடையற்ற, வெளிப்படையான, விதிமுறைகளுக்கு உட்பட்ட பலதரப்பு வர்த்தகக் கட்டமைப்பில் சிங்கப்பூர் தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருப்பதை உலக நாடுகளுக்குத் தெரிவிக்கவேண்டியிருப்பதாக அமைச்சர் சான் கூறினார். 

உங்கள் கருத்து

Top