Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நாயைக் கருணைக் கொலை செய்த உரிமையாளர்கள், அதைப் பராமரிப்பதில் எந்தக் குறையும் வைக்கவில்லை :விலங்குநலச் சேவை அமைப்பு

தாங்கள் வளர்த்து வந்த நாயைக் கருணைக் கொலை செய்த உரிமையாளர்கள், அதைப் பராமரிப்பதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. நாயைத் துன்புறுத்தவும் இல்லை என்று விலங்குநல சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
நாயைக் கருணைக் கொலை செய்த உரிமையாளர்கள், அதைப் பராமரிப்பதில் எந்தக் குறையும் வைக்கவில்லை :விலங்குநலச் சேவை அமைப்பு

(படம்: Facebook / Exclusively Mongrels Limited)

தாங்கள் வளர்த்து வந்த நாயைக் கருணைக் கொலை செய்த உரிமையாளர்கள், அதைப் பராமரிப்பதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. நாயைத் துன்புறுத்தவும் இல்லை என்று விலங்குநல சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

நாயைக் கருணைக் கொலை செய்த மருத்துவர்களும், நன்னடத்தை நெறிமுறைகளை மீறவில்லை என்று கூறப்பட்டது.

Exclusively Mongrels எனும் நாய்களுக்கான சமூகநலக் குழு, சம்பவத்தையொட்டிப் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

அக்குழுவிடமிருந்து நாய், 2017 டிசம்பரில் Loki என்ற நாய் தத்தெடுக்கப்பட்டது.

தொடக்கத்தில், Loki பயந்த சுபாவத்தைக் கொண்டிருந்தாலும், 2018,2019-ஆம் ஆண்டுகளில் பெரிதாக வளர்ந்த அது, மற்றவர்களைத் தாக்கக்கூடிய போக்கைக் கொண்டிருந்தது என்று விலங்குநலச் சேவை அமைப்பு கூறியது.

2018-க்கும் இவ்வாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், மற்ற நாய்கள், உரிமையாளர்கள், உரிமையாளர்களின் உறவினர்கள், பிள்ளைகள் ஆகியோரை Loki தாக்கியதாக 12 சம்பவங்கள் பதிவாகின.

நாய்க்குத் தகுந்த பராமரிப்பை வழங்க, உரிமையாளர்கள் தங்களால் இயன்றதைச் செய்ததாக அமைப்பு கூறியது.

இருப்பினும், குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய, Loki
நாய் இவ்வாண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி கருணைக் கொலை செய்யப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்