Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நாணயப் பரிவர்த்தனை விகித மோசடியில் $700,000 கையாடிய மாது

மலேசிய ரிங்கிட், சீனாவின் யுவானின் நாணயப் பரிவர்த்தனை விகிதத்தைவிட அதிகமாக சிங்கப்பூர் வெள்ளியை மாற்றித் தருவதாகக் கூறி மோசடிசெய்த மாதுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
நாணயப் பரிவர்த்தனை விகித மோசடியில் $700,000 கையாடிய மாது

கோப்புப் படம்: AFP/Roslan Rahman

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

மலேசிய ரிங்கிட், சீனாவின் யுவானின் நாணயப் பரிவர்த்தனை விகிதத்தைவிட அதிகமாக சிங்கப்பூர் வெள்ளியை மாற்றித் தருவதாகக் கூறி மோசடிசெய்த மாதுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு 4.20 ரிங்கிட் வழங்குவதாக அவர் உறுதிகூறியிருக்கிறார். அப்போது சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 3 ரிங்கிட் மட்டுமே.

நாணயப் பரிவர்த்தனை மோசடியுடன், கூட்டம் நிறைந்த கடைத்தொகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இடம்பிடித்துத் தருவதாகவும் கூறி சுமார் 700,000 வெள்ளியை 60 வயது சியோங் பீ ஜுங் (Cheong Bee Jung) கையாடியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

2010 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் அவர் இந்தக் குற்றங்களைப் புரிந்திருக்கிறார்.

ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, திருட்டு உள்ளிட்ட 29 குற்றச்சாட்டுகளை சியோங் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு 5ஆண்டுகள், 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் எதிர்நோக்கிய மேலும் சுமார் 100 குற்றச்சாட்டுகள் தீர்ப்பின்போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

பீஷானில் உள்ள அவரின் கழக வீட்டிற்குப் பணம் செலுத்துவதற்காக மோசடியில் ஈடுபட்டதாகக் கூறினார் சியோங்.

இதற்கு முன்னர் 1997க்கும் 2001க்கும் இடைப்பட்ட காலத்தில் மோசடிக் குற்றங்களுக்காகச் சிறையில் இருந்தார் மாது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்