Images
  • work
    படம்: Silver Ribbon Singapore

ஊழியர்களின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்திய 12 நிறுவனங்களுக்கு விருதுகள்

ஊழியர்களின் மனநலத்திற்கு ஆரோக்கியமான வேலைச்சூழலை உருவாக்கி தந்த 12 நிறுவனங்களுக்கு லாப நோக்கமில்லா மனநல அமைப்பான Silver Ribbon விருது வழங்கியுள்ளது.

- Bizlink Centre Singapore Ltd
- FedEx Express
- Jardines MINDSET
- Jebsen & Jessen Group
- Johnson & Johnson Singapore
- Otsuka Pharmaceuticals (Singapore) Pte Ltd
- Pocari Sweat Singapore
- Project X
- PSA Corporation Limited
- Rio Tinto
- சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை(Singapore Civil Defence Force)
- Twitter Asia Pacific

ஆகிய நிறுவனங்கள் விருது பெற்றன.

வேலையிடத்தில் நேர்மறையான மனநல விழிப்புணர்வை ஊக்குவித்தல், மனநல பிரச்சினை உடையோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குதல், உலக மனநல தினத்தை அனுசரித்தல், மனநலப் பிரச்சினைகளை அடையாளம் காண ஊழியர்களுக்குச் சொல்லிக் கொடுத்தல், மனநலப் பிரச்சினைகள் உள்ள ஊழியர்களுக்குத் தங்குமிடம் வழங்குதல்
போன்றவற்றுக்காக நிறுவனங்கள்
கௌரவிக்கப்பட்டன.

வேலையிடங்களில் மன நலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் வேளையில், விருது வென்ற நிறுவனங்கள், தங்கள் வேலையிடங்களில் மனநலத்தை மேம்படுத்த முன்மாதிரி முயற்சிகள் எடுத்திருப்பதாக சிறப்பு விருந்தினரான, மனிதவள மூத்த துணையமைச்சர் திரு.ஸாக்கி முகமது கூறினார்.

உடல் ஆரோக்கியத்தைப் போல, மனநலமும் முக்கியம். அது குன்றினால், ஊழியர்களின் உற்பத்தித்திறனை அது கணிசமாகப் பாதிக்கும் என்றும் அவர் சொன்னார்.  

Top