Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பூமியைப் போன்ற மற்றொரு கிரகத்தில் நீர்

பூமியைத் தாண்டி மற்றொரு கிரகத்தில், வாழும் சாத்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
பூமியைப் போன்ற மற்றொரு கிரகத்தில் நீர்

(படம்: AFP/M. KORNMESSER)

பூமியைத் தாண்டி மற்றொரு கிரகத்தில், வாழும் சாத்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்தைத் தாண்டி, பூமியைப் போல வெப்பநிலையைக் கொண்ட மற்றொரு கிரகத்தில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

உலகைவிட 8 மடங்கு கனமாகவும் , 2 மடங்கு பெரிதாகவும் உள்ள அந்தக் கிரகத்தின் பெயர் K2-18b. சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள கிரகங்களில் (exoplanets) மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த கிரகம் அது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கிரகத்தில் சமுத்திரங்கள் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

இன்றளவில் சூரியக் குடும்பத்துக்கு வெளியில் 4,000க்கும் மேற்பட்ட கிரகங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எதிர்கால விண்வெளி ஆய்வுகளில் இன்னும் பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்படும் என்பது நம்பிக்கை.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்