Images
  • expect more people at F1 (1)
    (படம்: Nuria Ling/TODAY)

இவ்வாண்டின் F1 கார்ப் பந்தயத்தில் கூடுதலான பார்வையாளர்களை எதிர்பார்க்கலாம்

F1 சிங்கப்பூர் இரவுநேரக் கார்ப் பந்தயத்திற்குச் செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு அதிகமாக இருக்கும் என்று பந்தய ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அந்தப் பந்தயத்திற்குச் சென்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை 260 ஆயிரத்துக்குமேல் இருந்தது.

அதற்கு முந்தைய ஆண்டு அது 219 ஆயிரம்.

ஹோட்டல்களும், பயண நிறுவனங்களும் இவ்வாண்டுக்கான பந்தயத்திற்குச் செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.

இவ்வாண்டுக்கான F1 இரவுநேரக் கார்ப் பந்தயத்தில் அனைத்துலகப் பிரபலங்களும் இடம்பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Marina Bay Street Circuit பகுதியைச் சுற்றி அமைந்துள்ள அனைத்து ஹோட்டல்களின் அறைகளும் நிறைந்துவிட்டன.

கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட F1 கார்ப் பந்தய ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டுவரை நடப்பில் இருக்கும். 

Top