Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மற்றோர் அதிரடித் திட்டத்தைத் தவிர்க்கப் பொதுச் சுகாதார முறைகளும் சமூகத்தின் நடத்தையும் கைகொடுக்குமா?

சிங்கப்பூரில் சமூக அளவில் அதிகரித்துவரும் கோவிட்-19 குழுமங்களின் எண்ணிக்கை அக்கறைக்குரியது;

வாசிப்புநேரம் -
மற்றோர் அதிரடித் திட்டத்தைத் தவிர்க்கப் பொதுச் சுகாதார முறைகளும் சமூகத்தின் நடத்தையும் கைகொடுக்குமா?

(படம்: Gaya Chandramohan)

சிங்கப்பூரில் சமூக அளவில் அதிகரித்துவரும் கோவிட்-19 குழுமங்களின் எண்ணிக்கை அக்கறைக்குரியது;
தற்போது நடப்பில் இருக்கும் நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுவதோடு; உடல்நலத்தை அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

சமூக அளவில் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் சிங்கப்பூருக்குப் பெரிய சோதனை

- தேசியப் பல்கலைக் கழக மருத்துவமனை, தொற்றுநோய்ப் பிரிவு மூத்த ஆலோசகர் பேராசிரியர் டேல் ஃபிஷர் (Dale Fisher)

மீண்டும் சிங்கப்பூரில் அதிரடித் திட்டம் நடப்புக்குவராமல் இருப்பதற்குப் பொதுச் சுகாதார முறைகளும் சமூகத்தின் நடத்தையும் போதுமானவையா என்பதுதான் கேள்வி என்றார் அவர்.

சுகாதார அமைச்சின் தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவருமாவார் டாக்டர் ஃபிஷர்.

அடுத்த சில வாரங்களுக்குத் தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம்; வீட்டுக்கு வெளியே இருப்பவர்களிடம் தொடர்பைக் குறைத்துக்கொள்வது நல்லது என்றும் அவர் வலியுறுத்தினார்.

முகக்கவசத்தைச் சரியாக அணிவதில் கவனமாக இருக்கும்படி ஊக்குவிக்கப்பட்டது.

கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது; சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற பழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

குறிப்பாக வெளியில் சாப்பிடும்போதும் பானம் அருந்தும்போதும் கவனமாக இருக்கும்படி பேராசிரியர் கேட்டுக்கொண்டார்.

முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன்வழி மீண்டும் அதிகரிக்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்களைச் சேர்ந்து குறைக்கலாம். இது சமூக முயற்சியாக இருக்க வேண்டும்.

- பேராசிரியர் ஃபிஷர் CNAஇன் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது அவ்வாறு கூறினார்.

- CNA/ja

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்