Images
  • senoirs
    (படம்:  TODAY)

கண் பரிசோதனைக்குச் செல்வது இனி மூத்தோருக்கு எளிதாகலாம்

கண் நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்வது, அவற்றைச் சமாளிப்பது போன்றவை மூத்தோருக்கு இனி எளிதாக இருக்கும்.

சமூக அமைப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் இலவசக் கண் பராமரிப்புத் திட்டம் அதற்கு உதவுகிறது.

கம்போங் அட்மிரல்ட்டியில் திட்டத்தைத் தொடங்கியுள்ளது யீஷூன் சுகாதார அமைப்பு.

ஆண்டுக்கு ஏறக்குறைய 400லிருந்து 500 பேருக்குக் கண் பரிசோதனைகள் மேற்கொள்வது நோக்கம்.

சிங்கப்பூரின் முதன்மை நோய்களில் கண் பார்வைப் பிரச்சினையும் ஒன்று.

'Select' என்று அழைக்கப்படும் இரண்டாம் கட்டக் கண் பராமரிப்புக் குழு கண் பிரச்சினைகளைச் சோதனை செய்யும்.

கண் பார்வையில் பிரச்சினை உள்ளவர்கள், கட்டணத்தில் கழிவுகள் வழங்கப்படும் நிபுணத்துவ வெளிநோயாளி சிகிச்சைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

பார்வையில் பிரச்சினைகள் உள்ளதாக பொதுவான பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்ட பிறகே 'Select' திட்டத்திற்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுவர்.

அதைத் தொடர்ந்து, கண் மருத்துவர் விரிவான கண் பரிசோதனைகளை மேற்கொண்டு தகுந்த சிகிச்சைகளை வழங்குவார்.

மோசமான அல்லது சிக்கலான கண் பிரச்சினைகள் உள்ளவர்கள் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களைத் தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு ஆலோசனை பெற முடியும்.

திட்டத்தைத் தொடங்கி வைத்த சுகாதார மூத்த துணையமைச்சர் ஏமி கோர், சிங்கப்பூரின் மூப்படையும் சமூகத்தில் கண் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

Top