Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கண்ணுக்குத் தெரியாத கண் பிரச்சினைகள்! சோதித்துப் பார்த்தால் மட்டுமே தெரியும்

கண் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தெளிவான அறிகுறிகள் தென்படுவதில்லை என்றும், பரிசோதனைகள் வழியாக மட்டுமே அவற்றை அடையாளம் காணமுடியும் என்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

-பிரியங்கா

கண் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தெளிவான அறிகுறிகள் தென்படுவதில்லை என்றும், பரிசோதனைகள் வழியாக மட்டுமே அவற்றை அடையாளம் காணமுடியும் என்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

கண் மருத்துவர் கிளாடின் பாங் (Claudine Pang) அதனை மீண்டும் வலியுறுத்தினார்.

நேயர்கள் கண் பரிசோதனைக்கு எப்போதெல்லாம் செல்கின்றனர் என்பதை அறிய, 'செய்தி' கடந்த வாரம் கருத்தாய்வு ஒன்றை நடத்தியது.

செல்வதில்லை - 51.41%
ஆண்டுக்கு ஒரு முறை - 29.2%
2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை - 19.40%

கண் பரிசோதனைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி டாக்டர் பாங்கிடம் கேட்டறிந்தது 'செய்தி'.

கண் பரிசோதனைகளை எப்போது செய்யவேண்டும்?

3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்: குழந்தை மருத்துவரை நாடும்போது, கண்களைப் பரிசோதிப்பது சிறந்தது. சோர்வுற்ற கண்கள், மாறுகண் ஆகிய குறைபாடுகள் இருந்தால் மருத்துவரால் உடனே அவற்றை அடையாளம் காணமுடியும்.

39 வயதுக்கு உட்பட்டவர்கள்: 2 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை. கிட்டப் பார்வையை அடையாளம் காணலாம்.

40 வயதுக்கு மேற்பட்டோர்: ஆண்டுக்கு ஒரு முறை. குறிப்பாக, கண் பார்வை சக்திக் குறைபாடு 600 டிகிரிக்கு மேல் இருந்தாலும், குடும்பத்தில் கண் பிரச்சினைகள் இருந்தாலும் கண்களைப் பரிசோதிப்பது அவசியம்.

ஆனால், கண்களில் வழக்கத்திற்கு மாறான மாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடுவது சிறந்தது.

எடுத்துக்காட்டாக...
- கண்கள் வீங்குதல்
- கண் பார்வை மங்கலடைதல்
- கண்களிலிருந்து தொடர்ந்து கண்ணீர் வழிதல்
- கண் பார்வையில் கறுப்புப் புள்ளிகள் மிதப்பதுபோல் தென்படுதல்

ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடிப் பராமரிப்பு தேவை.

பரிசோதனைகளுக்கு யாரை அணுகவேண்டும்?

கண் பிரச்சினைகள் உள்ளனவா என்பதை அறியவும் அதன் அறிகுறிகளை அடையாளம் காணவும் கண் மருத்துவரை நாட வேண்டும்.

மூக்குக்கண்ணாடியை மாற்றவும், கண் பார்வையின் நிலையை அறியவும் பார்வைப் பரிசோதகரை (Optician) நாடலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்