Images
  • Eye
    (படம்: Pixabay)

வீட்டில் இருந்தபடியே கண் பரிசோதனைகள்.... விரைவில்!

கண் பரிசோதனைகளை வீட்டில் இருந்தபடியே செய்துகொள்வது விரைவில் சாத்தியமாகக்கூடும்.

இணையம் வழி நடைபெறும் கிட்டப்பார்வைக்கான முன்னோடிப் பரிசோதனை திட்டத்தைச் சிங்கப்பூர் தேசியக் கண் நிலையத்தின் கிட்டப்பார்வை சிகிச்சை பிரிவு அறிமுகம் செய்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல், வழக்கமான சிகிச்சைகளாக இந்த இணையப் பரிசோதனைகளை வழங்குவது திட்டம்.

நோய்ப்பரவல் சூழலில், பரிசோதனைகளுக்குப் பலரால் நேரில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இனி அவர்கள், காணொளிகள் மூலம் செயல்படும் இணையப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளலாம்.

செங்காங் மருத்துவமனை உள்ளிட்ட இன்னும் கூடுதலான மருத்துவமனைகளில் இணையப் பரிசோதனைகளை வழங்கத் திட்டமுள்ளது.

தேசியக் கண் நிலையக் கிட்டப்பார்வை சிகிச்சைப் பிரிவின், ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியில் அதுபற்றி அறிவிக்கப்பட்டது.

Top