Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

EZ-Link அட்டையைப் பயன்படுத்தி உள்ளே வெளியே ஆட்டம் ஆடிய ஆடவர்

ஊட்ரம் பார்க் ரயில் நிலையத்தில் ஆடவர் ஒருவரின் விநோதப் போக்கு இணையவாசிகளைக் குழப்பியுள்ளது.

வாசிப்புநேரம் -
EZ-Link அட்டையைப் பயன்படுத்தி உள்ளே வெளியே ஆட்டம் ஆடிய ஆடவர்

(படம்: Facebook/ SG Kay Poh)

ஊட்ரம் பார்க் ரயில் நிலையத்தில் ஆடவர் ஒருவரின் விநோதப் போக்கு இணையவாசிகளைக் குழப்பியுள்ளது.

இரு நாள்களுக்குமுன் இரவு சுமார் 9 மணி அளவில் ஆடவர் தம்முடைய EZ-Link அட்டையைப் பயன்படுத்தி ரயில்நிலைய நுழைவாயிலில் தொடர்ந்து "உள்ளே வெளியே" என வந்துகொண்டிருந்தார்.

Facebookஇல் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்றில் சுமார் 2 நிமிடங்களுக்கு அவ்வாறே செய்துகொண்டிருந்தார் ஆடவர்.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் Travel Smart Rewards திட்டத்தின்கீழ் ஆடவர் புள்ளிகளைப் பெற விரும்புவதாக Roads.Sgஇன் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒவ்வொரு முறை நுழைந்து வெளியேறும்போதும் 10 புள்ளிகள் கிடைக்கும். 1000 புள்ளிகளை ஒரு வெள்ளி சலுகையாக மாற்றலாம் என்றும் பதிவு குறிப்பட்டது.

தகவல் உண்மையானதா என்று உறுதிசெய்ய 'செய்தி' நிலப் போக்குவரத்து ஆணையத்தைத் தொடர்புகொண்டுள்ளது.

இணையத்தில் சிலர், ஆடவர் ரயில் நுழைவாயிலின் கட்டமைப்பைச் சோதிப்பதாகக் கூறினர்.

வேறு சிலர் பணம் சேமிக்க வேறு ஆக்ககரமான வழிகள் உள்ளதாகக் கூறியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்