Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உணவு-பான வர்த்தகத்திற்கு மாறியுள்ள 400க்கும் மேற்பட்ட இரவுக் கேளிக்கைக் கூடங்கள்

உணவு-பான வர்த்தகத்திற்கு மாறியுள்ள 400க்கும் மேற்பட்ட இரவுக் கேளிக்கைக் கூடங்கள்

வாசிப்புநேரம் -
உணவு-பான வர்த்தகத்திற்கு மாறியுள்ள 400க்கும் மேற்பட்ட இரவுக் கேளிக்கைக் கூடங்கள்

(படம்: CNA)

உணவு-பான வர்த்தகத்திற்கு மாறியுள்ள 400-க்கும் மேற்பட்ட இரவுக் கேளிக்கைக் கூடங்களின் உரிமங்கள், சமையல் வசதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ எழுத்து மூலம் பதிலளித்தார்.

உணவு-பான வர்த்தகத்திற்கு மாறிய 400-க்கும் மேற்பட்ட இரவுக் கேளிக்கைக் கூடங்களில் 11க்கு உணவக உரிமை வழங்கப்பட்டுள்ளது.

மற்ற அனைத்து கூடங்களுக்கும் நொறுக்குத் தீனிகள் செய்யக்கூடிய உரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் சிறிய அளவில் சமையல் கலன்கள் இருந்தாலே போதுமானது.

நோய்ப்பரவல் ஏற்படாமல் இருக்க, உணவு-பான வர்த்தகங்களில் கூடுதலான
பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

உணவு-பான வர்த்தகத்திற்கு மாறியுள்ள இரவுக் கேளிக்கைக் கூடங்களில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆராய்ந்த பிறகே அவை செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

அந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன, கேளிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்