Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உணவு விநியோக ஊக்குவிப்புத் திட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு

 உணவு விநியோக ஊக்குவிப்புத் திட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு

வாசிப்புநேரம் -
உணவு விநியோக ஊக்குவிப்புத் திட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு

படம்: AFP

சிங்கப்பூரில், உணவு விநியோக ஊக்குவிப்புத் திட்டம் ஜூலை 15ஆம் தேதி வரை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படுவதாக Enterprise Singapore அமைப்பு கூறியுள்ளது.

உணவு, பான வர்த்தகங்கள், உணவு விநியோகச்
சேவைகளை வழங்குவதிலும் இணையம்வழி தொழில் செய்வதிலும் உள்ள செலவுகளைக் குறைக்க அந்தத் திட்டம் உதவுகிறது.

கடந்த மாதம் 16ஆம் தேதி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து,
10ஆயிரத்திற்கும் அதிகமான உணவு, பானக் கடைகள் பயனடைந்துள்ளதாக வர்த்தக, தொழில் துணையமைச்சர் லோ யென் லிங் (Low Yen Ling) கூறினார்.

உணவு, பானத் துறை சிரமமான காலக்கட்டத்தை எதிர்நோக்கும் வேளையில்
வர்த்தகங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டதாக அவர் கூறினார்.

இடையூறுகளால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க உணவு விநியோக ஊக்குவிப்புத் திட்டம் நீட்டிக்கப்படுவதாக திருவாட்டி லோ தெரிவித்தார்.

வரும் 21ஆம் தேதி முதல் உணவங்களில் அமர்ந்து
உண்ண அனுமதிக்கப்பட்ட பிறகும் கூடுதல் காலத்திற்கு ஆதரவு வழங்குவது நோக்கம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்