Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 3 இரவு விடுதிகளின் உணவு - பான உரிமம் நிரந்தரமாக ரத்து

COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 3 இரவு விடுதிகளின் உணவு - பான உரிமம் நிரந்தரமாக ரத்து

வாசிப்புநேரம் -
COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 3 இரவு விடுதிகளின் உணவு - பான உரிமம் நிரந்தரமாக ரத்து

படம்: SFA

COVID-19 பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை மீறியதற்காக, உணவு -பானக் கடைகளாகத் தற்போது செயல்படும் 3 முன்னாள் இரவு விடுதிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

The Charm, Icon II, Frederico’s Paddles Too Pub & Cafeteria ஆகியவற்றின் உரிமங்களை சிங்கப்பூர் உணவு அமைப்பு நிரந்தரமாக ரத்து செய்துள்ளது.

அவற்றின் செயல்பாடுகள், உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு தெரிவித்தது.

ஜூலை 13 ஆம் தேதி The Charm நிலையத்தில் பாதுகாப்பு இடைவெளி பின்பற்றப்படவில்லை. தற்காலிகமாகத் தடை செய்யப்பட்ட சீட்டாட்டம், பகடையாட்டம் போன்றவை, உபசரிப்பாளர்கள் கொண்டு அங்கு விளையாடப்பட்டது.

ஜூலை 13 ஆம் தேதி, Icon II நிலையத்திலும் அதே சம்பங்கள் நடந்தன.

உணவு-பானக் கடைகளாகச் செயல்படும் இரவு விடுதிகள் அனைத்தையும், ஜூலை 16 ஆம் தேதி முதல் ஜூலை 30ஆம் தேதி வரை, தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால், Frederico’s Paddles Too Pub & Cafeteria அதை மதிக்காமல் ஜூலை 17ஆம் தேதி விடுதியை நடத்தியுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்