Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பள்ளிக்குத் திரும்பும் பிள்ளைகளுக்குக் கிருமிநாசினிகள் - பாலர்பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முகக் காப்புகள்

அடுத்த மாதம் பள்ளிக்குத் திரும்பும் சுமார் 650,000 மாணவர்களுக்குக் கிருமிநாசிகள் வழங்கப்படவுள்ளன. தொடக்கப்பள்ளி, பாலர்பள்ளி மாணவர்களுக்கு முகக் காப்புகளும் வழங்கப்படும் என்று துமாசிக் அறநிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பள்ளிக்குத் திரும்பும் பிள்ளைகளுக்குக் கிருமிநாசினிகள் - பாலர்பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முகக் காப்புகள்

(படம்:Temasek Foundation)

அடுத்த மாதம் பள்ளிக்குத் திரும்பும் சுமார் 650,000 மாணவர்களுக்குக் கிருமிநாசிகள் வழங்கப்படவுள்ளன. தொடக்கப்பள்ளி, பாலர்பள்ளி மாணவர்களுக்கு முகக் காப்புகளும் வழங்கப்படும் என்று துமாசிக் அறநிறுவனம் தெரிவித்துள்ளது.

அது ஜூன் 8ஆம் தேதிக்குள் பள்ளிகள் அனைத்துக்கும் பொருள்களை விநியோகம் செய்யவுள்ளது.

பள்ளிக்குத் திரும்பும் முதல் நாளில் மாணவர்கள் அனைவருக்கும் பொருள்கள் கிடைக்காமல் போகலாம் என்பதால் பிள்ளைகள் சொந்த முகக் கவசங்களை அணிந்து செல்லுமாறு ஆலோசனை கூறப்படுகிறது

கல்வி அமைச்சுடனும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்புடனும் இணைந்து துமாசிக் அறநிறுவனம் இம்முயற்சியில் இறங்கியுள்ளது.

இதன்மூலம் சுமார் 42,000 ஆசிரியர்களும் தற்காலிகப் பள்ளி ஊழியர்களும் பயனடைவர்.

பாலர்பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி மாணவர்கள்வரை அனைவருக்கும் 500 மில்லிலிட்டர் போத்தல் கிருமிநாசினியும் பையில் வைத்து எடுத்துச் செல்ல 50 மில்லிலிட்டர் போத்தல் கிருமிநாசினியும் வழங்கப்படும்.

பாலர்பள்ளி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் எளிதில் சுத்தம் செய்யக்கூடிய முகக் காப்புகள் வழங்கப்படும். அத்துடன் ரத்தத்தில் சுவாசவாயுவை அளவிடும் oximeter கருவிகளும் வழங்கப்படும்.

தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய MaskSafe DET30 ரக முகக் கவசங்களையும் இரு போத்தல்கள் கிருமிநாசினிகளையும் பெறுவர்.

மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக இருக்கப் போதுமான ஏற்பாடுகளைச் செய்வதில் தனது பங்கையாற்றுவதாகத் துமாசிக் அறநிறுவனம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்