Images
  • office
    (படம்: Ministry of Manpower)

'வேலையிடப் பாகுபாட்டைச் சமாளிக்க, சமரசப் பேச்சு நடத்துவதே முதற்படி'

வேலையிடப் பாகுபாட்டைச் சமாளிக்க, சமரசப் பேச்சு நடத்துவதே முதல் படி என்று மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூன் (Koh Poh Koon) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அனைத்து வழிகளிலும் பிரச்சினையைத் தீர்க்க முயன்ற பிறகே நடுவர் மன்றம் தலையிடும் என்று அவர் கூறினார்.

நியாயமான பணியமர்த்தும் நடைமுறைகளைச் சட்டபூர்வமாக்க அதிகாரிகள் முற்படும் வேளையில், டாக்டர் கோவின் விளக்கம் வந்துள்ளது.

வேலையிடத்தில் நியாயமாக நடந்துகொள்வது தொடர்பான முத்தரப்புக் குழு, அடுத்த ஆண்டின் முதற்பாதிக்குள் அதன் ஆய்வை முடித்து, பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம் அவற்றை ஏற்றுக்கொண்டால், சட்டமாக்குவதற்கான பணிகள் தொடங்கும்.

எத்தகைய வேலையிடப் பாகுபாடும் ஒருபோதும் சகித்துக்கொள்ளப்படாது என்ற சமிக்ஞையை முன்வைப்பது நோக்கம் என்று டாக்டர் கோ கூறினார். 

Top