Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முட்டை விலையைக் கட்டுப்படியானதாக வைத்திருக்க Fairprice பேரங்காடி முயற்சி

மலேசியாவிலிருந்து தருவிக்கப்படும் முட்டை விலை அதிகரித்து வந்தாலும் அதைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி எடுத்து வருவதாக Fairprice பேரங்காடி தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
முட்டை விலையைக் கட்டுப்படியானதாக வைத்திருக்க Fairprice பேரங்காடி முயற்சி

(படம்: AFP)

மலேசியாவிலிருந்து தருவிக்கப்படும் முட்டை விலை அதிகரித்து வந்தாலும் அதைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி எடுத்து வருவதாக Fairprice பேரங்காடி தெரிவித்துள்ளது.

மலேசியாவில் முட்டைகளின் விலை அதிகரித்து வருவதற்குப் பின் சதிவேலை இருப்பதாக எழுந்துள்ள சந்தேகத்தினால் முட்டை ஏற்றுமதி கட்டுப்படுத்தப்படலாம் என்று மலேசியா கூறியுள்ளது.

அதன் வெவ்வேறு விநியோகிப்பாளர்களுடன் கலந்துபேசி முட்டை விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துவருவதாக செய்தியிடம் பேசிய Fairprice பேச்சாளர் கூறினார்.

 50 விழுக்காட்டு முட்டைகள் சிங்கப்பூரிலுள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து வருகின்றன.

தற்போது அதன் கிளைகளில் விற்பனையாகும் 40 விழுக்காட்டு முட்டைகள் மலேசியாவிலிருந்தும், நியூஸிலந்து, ஆஸ்திரேலியாவிலிருந்தும் வருகின்றன.

இதுவரை Fairprice பேரங்காடிகளுக்கு விநியோகம் செய்யப்படும் உள்ளூர் முட்டைகளின் விலையிலும் எண்ணிக்கையிலும் மாற்றமில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்