Images
  • Fair price
    கோப்புப் படம்: NTUC FairPrice

முன்னோடித் தலைமுறையினர் பிரதிநிதித் திட்டத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்தும் NTUC FairPrice பேரங்காடி

NTUC FairPrice பேரங்காடி, அதன் முன்னோடித் தலைமுறையினர் பிரதிநிதித் திட்டத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

சமூக அளவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பதால், தொடர்ந்து மூத்தோரைப் பாதுகாக்க அந்தத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.

மூத்தோருக்காகப் பொருள்களை வாங்கித்தர உதவும் குடும்பத்தினருக்குச் சிறப்புச் சேமிப்பை வழங்க, பிரதிநிதித் திட்டம் உதவும் என்று FairPrice குறிப்பிட்டது.

வரும் திங்கட்கிழமை தொடங்கி, அடுத்தமாத இறுதிவரை அது நடப்பில் இருக்கும்.

சென்ற ஆண்டு அதிரடி திட்டம் நடப்பில் இருந்தபோது, அந்தத் திட்டம் முதலில் நடப்பிற்கு வந்தது.

திங்கள், புதன் ஆகிய கிழமைகளில், முன்னோடித் தலைமுறையினரின் உறவினர், முன்னோடித் தலைமுறை அடையாள அட்டையைக் காட்டிச் சலுகை விலையில் பொருள்களை வாங்கலாம்.

அதிகபட்சமாக அவ்வாறு 200 வெள்ளி வரையிலான பொருள்களுக்கு, 3 விழுக்காடுவரை கழிவு கிடைக்கும். அது, FairPrice, Unity கிளைகளுக்குப் பொருந்தும். 

Top