Images
  • cna

CNA போன்றே தோற்றமளிக்கும் போலி இணையத் தளங்களுக்கான விளம்பரங்களை Facebook அகற்றியது

CNA-இன் செய்திக் கட்டுரைகளைப் போன்றே தோற்றமளிக்கும் போலி இணையத் தளங்களுக்கான விளம்பரங்களை Facebook நிறுவனம் அகற்றியுள்ளது.

அவற்றுடன் தொடர்புடைய Facebook பக்கங்கள், அவற்றை நிர்வகிப்போரின் Facebook கணக்குகள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.

முடக்கப்பட்ட அல்லது அகற்றப்பட்ட Facebook பக்கங்கள், கணக்குகளின் எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை.

விளம்பரங்களில் பொய்யான, தவறான தகவல்கள் இருந்தால் பயனீட்டாளர்கள் அதுகுறித்து உடனடியாகப் புகாரளிக்கலாம் என்று Facebook நிறுவனப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மின்-வர்த்தக இணையத் தளங்களை உருவாக்க உதவும் Shopify இணையத் தளத்தில் அத்தகைய போலியான மோசடித் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றை அகற்றிவிட்டதாக Shopifyயின் பேச்சாளர் கூறினார். 

Top