Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போலியானவை எனச் சந்தேகிக்கப்படும் முகக்கவசங்களை விற்றதாக நம்பப்படும் ஆடவர் கைது

போலியானவை எனச் சந்தேகிக்கப்படும் சுவாசக் கருவிகளை இணையத்தில் விற்ற சந்தேகத்தின் பேரில், 34 வயது ஆடவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
போலியானவை எனச் சந்தேகிக்கப்படும் முகக்கவசங்களை விற்றதாக நம்பப்படும் ஆடவர் கைது

(படம்: Pixabay)

போலியானவை எனச் சந்தேகிக்கப்படும் முகக்கவசங்களை இணையத்தில் விற்ற சந்தேகத்தின் பேரில், 34 வயது ஆடவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவும், சுகாதார அறிவியல் ஆணையமும் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில், அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.

போலியானவை எனச் சந்தேகிக்கப்படும் 41,000க்கும் அதிகமான முகக்கவசங்கள், சோதனை நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்டன.

அவை, சுமார் 200,000 வெள்ளி பெறுமானமுள்ளவை எனக் கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் N-95 ரக முகக்கவசங்களும் அடங்கும்.

பறிமுதல் செய்யப்பட்ட முகக்கவசங்கள் போலியானவையா என்பதை உறுதிசெய்ய தற்போது சோதனை நடத்தப்படுகிறது.

சுகாதாரப் பொருள்களுக்கான சட்டத்தின் கீழ், போலியான சுகாதாரப் பொருள்களை விற்பதோ, விநியோகிப்பதோ குற்றமாகும்.

கைதுசெய்யப்பட்ட ஆடவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 100,000 வெள்ளி வரையிலான அபராதம், மூவாண்டு வரையிலான சிறைத் தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்