Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மூத்த குடிமக்களைக் குறிவைத்துப் போலி உறுப்பியம் வழங்கும் “Senior Advantage” இணையத்தளம்: காவல்துறை எச்சரிக்கை

மூத்த குடிமக்களைக் குறிவைத்துப் போலி உறுப்பியம் வழங்கும் “Senior Advantage” எனும் பெயரிலான இணையத்தள மோசடி குறித்துக் காவல்துறை, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
மூத்த குடிமக்களைக் குறிவைத்துப் போலி உறுப்பியம் வழங்கும் “Senior Advantage” இணையத்தளம்: காவல்துறை எச்சரிக்கை

(படம்: SPF)

மூத்த குடிமக்களைக் குறிவைத்துப் போலி உறுப்பியம் வழங்கும் “Senior Advantage” எனும் பெயரிலான இணையத்தள மோசடி குறித்துக் காவல்துறை, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இணையத்தில் “Senior Advantage” குறித்த விளம்பரங்கள் அல்லது
மின்னஞ்சல்களில் உள்ள URL இணைப்பைச் சொடுக்கியபோது, ஒரு போலியான இணையப்பக்கத்திற்கு அது இட்டுச்சென்றது.

அதில், பேரங்காடிகள், உணவகங்கள், பிற சில்லறைக் கடைகளில் மூத்த குடிமக்கள் எவ்வாறு சிறப்புத் தள்ளுபடி பெறலாம் எனப் பொய்யாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

உறுப்பினராக ஒரு கட்டணத்தைச் செலுத்தினால், அந்தச் சலுகைகளைப் பெறலாம் என இணையப்பக்கம் தெரிவித்தது.

அவ்வாறு கட்டணம் செலுத்திய மூத்தோர், பின்னர் எந்தவொரு மின்னஞ்சல் அறிவிப்பையும் பெறாதபோதுதான், அது ஒரு மோசடி என்பதைப் புரிந்துகொண்டனர்.

சிலர், நிறுவனத்தின் தகவல்களை இணையத்தில் தேடிப் பார்த்த பிறகுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.

மோசடியைத் தவிர்க்க, பொதுமக்கள் பின்வரும் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகின்றனர்:

  • இணையத்தில் தேவையின்றித் தோன்றும் விளம்பரங்களில் இருக்கும் URL இணைப்புகளுக்குச் செல்ல வேண்டாம்.
  • அதிகாரபூர்வ இணையப்பக்கம், ஆதாரங்களுடன் தகவலின் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்க்கவும்.
  • ஏதேனும் மோசடிப் பரிவர்த்தனைகளைக் கண்டால், உடனடியாக கட்டணச் சேவை வழங்கும் நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தவும்.      

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்