Images
  • rl

பொய்ச் செய்திகளைக் கையாள சமய அமைப்புகளுக்குக் கூடுதல் உதவி

இணையத்தில் பரப்பப்படும் பொய்த் தகவல்களைக் கையாள்வதில் சிங்கப்பூரில் உள்ள சமய அமைப்புகள் கூடுதல் உதவியைப் பெறவுள்ளன.

தேசிய நூலக வாரியம் அதன் தொடர்பில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கை நடத்தவிருக்கிறது.

பயங்கரவாதத்தை முறியடிப்பதன் தொடர்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சமயத் தலைவர்கள் பொய்த் தகவல்களை அடையாளம் காண உதவும் அரை மணிநேரப் பாடத்தை தேசிய நூலக வாரியம் வடிவமைத்துள்ளது.

கலாசார, சமூக, இளையர் அமைச்சும், காவல் துறையும் இணைந்து கையேட்டை உருவாக்கியுள்ளன.

சிங்கப்பூரில் உள்ள அனைத்து சமய அமைப்புகளுக்கும் கையேடு வழங்கப்படும்.

பாதுகாப்பை வலுப்படுத்துவது, நெருக்கடி நேரத்தில் மாற்றுத் திட்டங்களை வரைவது எப்படி போன்ற தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்குரியவற்றை அடையாளம் காணக் கையேடு உதவும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார்.

இனம், சமூகம் சார்ந்த அம்சங்கள் எப்போதுமே உணர்வுபூர்வமானவை. பல இன மக்கள் இங்கு ஒற்றுமையாக வாழ்ந்தாலும், நாட்டுக்கு வெளியே நடப்பவை சிங்கப்பூரைப் பாதிக்கலாம். எனவே, அத்தகைய தாக்கத்தை தொடக்கத்திலேயே முறியடிப்பது முக்கியம் என்றார் அவர். 

Top