Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சொந்த மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களில் கையெழுத்திட்ட மருத்துவர்

தன்னுடைய மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களில் தானே கையெழுத்திட்டதாக 28 வயது மருத்துவ அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
சொந்த மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களில் கையெழுத்திட்ட மருத்துவர்

(படம்: AFP/Joe Raedle)

தன்னுடைய மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களில் தானே கையெழுத்திட்டதாக 28 வயது மருத்துவ அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜொவெல் அருண் சுர்சாஸ் எனும் அந்த அதிகாரி 2015இல்
பொங்கோலிலுள்ள இட்டர்ன் (Etern) மருந்தகத்தில் அவ்வாறு 4 சான்றிதழ்களில் கையெழுத்திட்டிருக்கிறார்.

MOH Holdings நிறுவனத்தின் கீழ் ஜொவெல் அப்போது சாங்கி மருத்துவமனையில் பணிபுரிந்துவந்தார்.

ஆனால் கனடாவிலிருந்த காதலியைக் காணச் செல்ல பணம் சம்பாதிக்க இட்டர்ன் மருந்தகத்தில் தற்காலிக மருத்துவராகவும் பணிபுரிந்தார்.

அங்கு ஒரு மணி நேரத்துக்கு 95 வெள்ளி சம்பளம் பெற்றார் ஜொவெல்.

இட்டர்னில் இருக்கும்போது தன்னுடைய சாங்கி மருத்துவமனைப் பணியிலிருந்து விலக்குப் பெற மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களில் தனக்குத் தானே கையெழுத்திட்டிருக்கிறார் ஜொவெல்.

வேறு ஒரு தற்காலிக மருத்துவர் தனக்கு மருத்துவ விடுப்புக் கொடுத்தது போன்ற தோற்றத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.

சாங்கி மருத்துவமனை இட்டர்ன் மருந்தகத்திடம் விசாரித்த போது உண்மை வெளிப்பட்டது.

மோசடி தொடர்பான ஒரு குற்றச்சாட்டை ஜொவெல் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் மூன்று குற்றச்சாட்டுகளைக் கருத்திற்கொண்டு அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்.

கடந்த ஆண்டு சிங்கப்பூர் மருத்துவ மன்றம் அவருக்கு மூன்று ஆண்டுப் தற்காலிகப் பணி நீக்கமும் 15,000 வெள்ளி அபராதமும் விதித்தது.

அரசாங்கத் தரப்பு, தற்காப்புத் தரப்பு இரண்டும் அவருக்கு அபராதம் மட்டுமே விதிக்கக் கேட்டுக்கொள்ளவிருக்கின்றன. ஆனால் எவ்வளவு தொகை என்பது குறித்து இணக்கம் ஏற்படவில்லை.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்