Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடை மூடப்படுவதாக மிகைப்படுத்தி வெளியிடப்படும் மலிவு விற்பனை விளம்பரங்களை அகற்றும் ABC, Valu$ கடைகள்

கடை மூடப்படுவதாக மிகைப்படுத்தி வெளியிடப்படும் மலிவு விற்பனை விளம்பரங்களை ABC, Valu$ கடைகள் அகற்றவுள்ளன. 

வாசிப்புநேரம் -
கடை மூடப்படுவதாக மிகைப்படுத்தி வெளியிடப்படும் மலிவு விற்பனை விளம்பரங்களை அகற்றும் ABC, Valu$ கடைகள்

(படம்: Facebook/Valu$ Shop At City Square Mall B2)

கடை மூடப்படுவதாக மிகைப்படுத்தி வெளியிடப்படும் மலிவு விற்பனை விளம்பரங்களை ABC, Valu$ கடைகள் அகற்றவுள்ளன.

கடைகள் மூடப்படுவதால் பொருள்கள் மலிவாக விற்கப்படுவதாகவும், குறுகிய காலத்திற்கு மட்டுமே பொருள்கள் அந்த விலையில் விற்கப்படுவதாகவும்
அத்தகைய விளம்பரங்கள் வாடிக்கையாளர்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட கடைகள் “Closing Down Sale” “Fire Sale” என்ற வாசகங்கள் இடம்பெறும் விளம்பரங்கள், தங்கள் அனைத்துக் கிளைகளிலும் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தள்ளுபடிகள், மலிவு விற்பனை ஆகியவற்றை மிகைப்படுத்தும் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதாகவும் ஆணையம் தெரிவித்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்