Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போலி வெப்பமானிகள் விற்பனை - சந்தேக நபர் கைது

போலி வெப்பமானிகள் இணையத்தில் விற்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 33 வயதுப் பெண்ணைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 

வாசிப்புநேரம் -

போலி வெப்பமானிகள் இணையத்தில் விற்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 33 வயதுப் பெண்ணைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

பிடோக் ரிசர்வோர் வியூ, பொத்தோங் பாசிர் அவென்யூ 1 (Bedok Reservoir View, Potong Pasir Avenue 1) ஆகிய இடங்களில் காவல்துறை நடத்திய சோதனையின்போது 300க்கும் மேற்பட்ட போலி வெப்பமானிகளும் அவற்றின் உறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்டவற்றின் விலை 14,000 வெள்ளிக்கும் அதிகமாக இருக்கலாம் எனக் காவல்துறை தெரிவித்தது.

வெளிநாடுகளிலிருந்து போலி வெப்பமானிகளை அந்தப் பெண் பெற்றிருக்கலாம் என்று ஆரம்ப விசாரணை புலப்படுத்துகிறது. அவற்றைப் பின்னர், அவர் இணையத்தில் விற்பனைக்குப் பதிவு செய்திருந்ததாக நம்பப்படுகிறது.

விசாரணை தொடர்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 100,000 வெள்ளி வரை அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்