Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இணையத்தில் என்னைப் பற்றி பரவும் தகவல் பொய்யானது: துணைப் பிரதமர் ஹெங்

இணையத்தில் தம்மை மேற்கோள் காட்டிப் பரவி வரும் பொய்ச் செய்தி குறித்து துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் எச்சரித்துள்ளார்.சிங்கப்பூரர்கள் அத்தகைய பொய்ச் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். 

வாசிப்புநேரம் -
இணையத்தில் என்னைப் பற்றி பரவும் தகவல் பொய்யானது: துணைப் பிரதமர் ஹெங்

(படம்: Mediacorp)

சிங்கப்பூர்: இணையத்தில் தம்மை மேற்கோள் காட்டிப் பரவி வரும் பொய்ச் செய்தி குறித்து துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் எச்சரித்துள்ளார்.சிங்கப்பூரர்கள் அத்தகைய பொய்ச் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

CNN செய்தி நிறுவனச் சின்னத்துடன் பரவும் அந்தப் பொய்ச் செய்தியைப் படத்துடன் Facebookஇல் இன்று பதிவு செய்தார் அவர்.

"நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் உங்களைப் பணக்காரராக்கும் நிறுவனத்தில், 6 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளார்" என அந்தப் பொய்ச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் உண்மையில்லை என்று கூறிய திரு. ஹெங், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டுமென்றார்.

குறிப்பாக, கடன்பற்று அட்டை விவரங்கள், கடவுச்சொற்கள் ஆகிய அம்சங்களில் அதிக கவனம் தேவை என்றார் அவர்.

மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோவும் இதேபோன்ற பொய்ச் செய்தி குறித்து, Facebookஇல் 2 நாள்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தார்.

போலியான இணையத்தளமொன்று, தமது பெயரில் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்