Images
  • jackfruit
    (படம்: செய்தி நேயர்)

விழுந்த பழத்தை எடுத்தால் கூட அபராதமா? விளக்கம் பெற்றது 'செய்தி'

'விழுந்த பழத்தை எடுத்தால் கூடவா அபராதம்?' ,'இதுவரை எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது?' என்ற கேள்விகளுக்கு விடை கூற, தேசியப் பூங்காக் கழகத்தின் குழும இயக்குநர் திரு. சுவா ஹொக் சியோங்கை அணுகியது 'செய்தி'.

கேள்வி: விழுந்த பழத்தை எடுத்தால் கூடவா அபராதம்?

பதில்: சிங்கப்பூரில் அரசாங்க நிலத்தில் உள்ள மரங்களிலிருந்து அனுமதியின்றிப் பழங்களைப் பறிக்கவோ, விழுந்த பழத்தை எடுக்கவோ கூடாது .

பொதுமக்கள் அவ்விடங்களில் உள்ள மரங்களிலிருந்து பழங்களைப் பறித்தாலோ, விழுந்த பழங்களை எடுத்தாலோ, அது தோட்ட வடிமைப்பைப் பாதிக்கக்கூடும் அல்லது அப்பழத்தைச் சாப்பிடக்கூடிய மற்ற உயிரினங்களைப் பாதிக்கலாம்.

உதாரணத்திற்கு, சிலர் மரங்களிலிருந்து பழத்தை விழச்செய்ய, மரத்தின்மீது கல் எறிவார்கள். இதனால் மரப்பட்டை கிழியலாம். கிருமித் தொற்றால் பாதிக்கப்படலாம்.

கேள்வி: அபராதம் என்ன?

பதில்:
பூங்காக்களில் - 5,000 வெள்ளி வரையிலான அபராதம்
இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதிகள் - 50,000 வெள்ளி வரையிலான அபராதம்

கேள்வி: இதுவரை, எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது?

பதில்: கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: சிங்கப்பூரின் இயற்கை மரபுடைமையைப் பற்றி அறிய சாலையோரங்களில் உள்ள மரங்களிலிருந்து விழும் இலைகளையோ பழங்களையோ சுவைத்துப் பார்க்க விரும்பினால்?

பதில்: சாலையோரங்களில் மரங்களிலிருந்து விழும் இலைகளையோ பழங்களையோ எடுக்கவேண்டாம் என்பது எங்கள் ஆலோசனை. தவறான பழத்தையோ இலையையோ சுவைத்தால், உடல்நலம் பாதிக்கப்படலாம்.

கேள்வி: சொந்த முறையில் செடி வளர்ப்பதற்கு அல்லது ஆராய்ச்சி செய்வதற்குப் பழங்களோ, விதைகளோ தேவைப்பட்டால்?

பதில்: அதற்கான உரிய உரிமத்தைப் பெற தேசியப் பூங்காக் கழகத்தை அணுகவேண்டும்.

  

Top