Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் குடும்ப தினம் 2018

உலகின் மற்ற பகுதிகளுடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள தொழில்நுட்பம் சிறந்த வாய்ப்பளிக்கிறது; நமது வாழ்க்கைமுறையை மேம்படுத்திக் கொள்ளவும் அது உதவுகிறது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் குடும்ப தினம் 2018

படம்: சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்

உலகின் மற்ற பகுதிகளுடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள தொழில்நுட்பம் சிறந்த வாய்ப்பளிக்கிறது; நமது வாழ்க்கைமுறையை மேம்படுத்திக் கொள்ளவும் அது உதவுகிறது. பாசிர் ரிஸ்- பொங்கோல் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஸைனல் சபாரி அவ்வாறு கூறியுள்ளார்.  மூத்தோருக்கும் இளையருக்கும் இடையிலான தொழில்நுட்ப இடைவெளியும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் குடும்ப தினம் 2018 நிகழ்ச்சி நேற்று லேபரடோர் பார்க்கில் நடைபெற்றது. 'அறிவார்ந்த தேசத்தில் அறிவார்ந்த சமூகம்' என்ற கருப்பொருளுடன் மலர்ந்த நிகழ்ச்சியில் சுமார் 750 பேர் கலந்து கொண்டனர். தேசிய நூலக வாரியம் மின்-புத்தகங்களை வழங்குகிறது. அவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதை நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் அறிந்து கொண்டனர்.

திறன்பேசிகளைப் பரவலாகப் பயன்படுத்தும் மூத்தோர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் மற்ற மூத்தோரை அவற்றைப் பயன்படுத்தும்படி ஊக்குவித்தனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்